LATEST NEWS
கனா காணும் காலங்கள் பிரபலம் தீபிகாவிற்கு திருமணம்…. களைகட்டும் சடங்கு நிகழ்ச்சி…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!
விஜய் டிவியில் இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர் தான் கனா காணும் காலங்கள்.
தற்போது புது வடிவில் நவீன முறையில் சமகால பள்ளி கலைக்களத்தில் கதை அமைத்து கனா காணும் காலங்கள் இணைய தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
முதல் சீசனை போலவே தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த தொடரில் பரத், சங்கீதா, அரவிந்த் ஜெய் ஜு, ராஜா வெற்றி பிரபு, இர்பான், தேஜா வெங்கடேஷ், தீபிகா வெங்கடாசலம், ஆஷிக் கோபிநாத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் நடிகர்கள் தீபிகா வெங்கடாசலம் மற்றும் ராஜா வெற்றி பிரபு ஆகியோர் அபி மற்றும் கௌதம் வேடத்தில் நடித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கடந்து சில நாட்களாக பல செய்திகள் உலா வந்தன.
இதனைத் தொடர்ந்து தீபிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலை ரசிகர்களிடம் தெரிவித்தார்.
தனது நண்பரும் சக நடிகருமான ராஜா வெற்றியை திருமணம் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.
அதே சமயம் ராஜா வெற்றி பிரபுவுடன் நிச்சயதார்த்தத்தையும் அறிவித்துள்ளார். நாங்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் என்ற தலைப்புடன் அவர்கள் இருவரின் கட்டைவிரல் ரேகையை கிரிம்சன் சிவப்பு நிறத்தில் இதை அடையாளமாக உருவாக்குவதை காட்டும் போஸ்டருடன் அவர் செய்தியை பகிர்ந்தார்.
இதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
தற்போது இவர்களுக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
