தமிழ் சினிமா பிரபலங்களுக்கு மிகவும் பிடித்த உணவு எது தெரியுமா?… இதோ ஒரு சிறப்பு தொகுப்பு…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமா பிரபலங்களுக்கு மிகவும் பிடித்த உணவு எது தெரியுமா?… இதோ ஒரு சிறப்பு தொகுப்பு…!!!

Published

on

பொதுவாக சினிமா நடிகர்கள் பலரும் தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சில உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். அதன்படி தென்னிந்திய நட்சத்திர நடிகர்கள் தயிர்சாதம் முதல் பிரியாணி வரை எந்த உணவை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் விஜய்:

Advertisement

கோலிவுட்டின் முன்னணி பிரபலமான நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தோசை மற்றும் சிக்கன் கறி மிகப்பெரிய ரசிகராம். உணவை தேர்ந்தெடுப்பதில் இவருக்கு நல்ல ரசனை உண்டு. இவர் எப்போதும் சிக்கன் கரியுடன் மிருதுவான தோசையை சாப்பிடுவதை அதிகம் விரும்புவார்.

நடிகர் ரஜினி:

Advertisement

சூப்பர் ஸ்டார் என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது ரஜினி தான். இவருக்கு மிகவும் பிடித்த உணவு மட்டன் மற்றும் சிக்கன் கறி. இவர் எப்போதும் இதை தான் அதிகம் விரும்புவார்.

நடிகர் சூர்யா:

Advertisement

கோலிவுட் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருக்கு தமிழகத்தின் புகழ்பெற்ற தயிர்சாதம் தான் மிகவும் பிடிக்கும். இவர் காலை உணவாக எப்போதும் தோசையை எடுத்துக் கொள்வார்.

நடிகர் கார்த்தி:

Advertisement

சூர்யாவின் உடன் பிறந்த சகோதரரான கார்த்தி தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருக்கு சாம்பார் வடை தொடங்கி இட்லி சட்னி வரை தென்னிந்திய உணவுகள் என அனைத்துமே பிடிக்கும்.

நடிகை ஜோதிகா:

Advertisement

சினிமாவின் முன்னணி நடிகையும் சூர்யாவின் மனைவியும் ஆன ஜோதிகா இன்றும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் பிரியாணி தான். இவர் ஹைதராபாத் பிரியாணியை அதிகம் விரும்புவார். அதேசமயம் ஆம்பூர் மற்றும் செட்டிநாடு பிரியாணியும் விருப்பம் கொண்டவர்.

நடிகர் தனுஷ்:

Advertisement

தமிழ் சினிமாவில் மிக எளிமையான நடிகரான தனுஷ் தமிழ்நாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவது வழக்கம். இவர் காரக்குழம்பு தொடங்கி தோசை சாம்பார் வரை அனைத்தையும் விரும்புவார்.

நடிகர் கமல்ஹாசன்:

Advertisement

தனது நடிப்பு திறமையால் உலகநாயகன் என்று புகழ் பெற்ற கமல்ஹாசன் சாப்பாட்டு விஷயத்தில் அரண்மனைக்கிளி ராஜ்கிரன் போல சாப்பாட்டு பிரியர். சிக்கன் மற்றும் மட்டன் கறி இவருக்கு மிகவும் பிடிக்கும். அதேசமயம் சர்க்கரை இல்லாத கருப்பு காபியை அதிகம் விரும்பி அருந்துவார்.

நடிகை ஸ்ருதிஹாசன்:

Advertisement

கமல்ஹாசனின் மூத்த மகனான ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு செட்டிநாடு சிக்கன் சாம்பார் மிகவும் பிடிக்குமாம்.

நடிகை திரிஷா:

Advertisement

தென்னிந்திய சினிமாவின் ராணி யாக திகழ்ந்து கொண்டிருக்கும் திரிஷா வெள்ளை அரிசியைவிட பழுப்பு அரிசியை அதிக விரும்புவார். பிரவுன் ரைஸ் உடன் சிக்கன் கரியும் இவருக்கு விருப்பமான உணவு.

பிரகாஷ் ராஜ்:

Advertisement

90களில் தொடங்கி இன்றுவரை வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜ் அனைத்து வகையான பிரியாணிகளையும் விரும்பி சாப்பிடுவார். ஹைதராபாத் பிரியாணி தொடங்கி தலப்பாக்கட்டு பிரியாணி வரை தமிழகத்தில் மிகவும் விருப்பப்படும் உணவின் தீவிர ரசிகர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in