அட நம்ம குஷ்புவா இது?…. 13 வயதில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க?…. அவரே வெளியிட்ட புகைப்படம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட நம்ம குஷ்புவா இது?…. 13 வயதில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க?…. அவரே வெளியிட்ட புகைப்படம்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை.

இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவர் நடித்த காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அடிக்கடி வெளியூர் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபகாலமாகவே இவர் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வரும் நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது அவர் 13 வயதில் எடுத்த புகைப்படத்தையும் தற்போது 52 வயதில் எடுத்திருக்கும் போட்டோவையும் ஒப்பிட்டு ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆக்கி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in