“முட்டாள்தனம்.. பச்சைப் பொய்..” பிரான்ஸ் கலவரத்தில் குடியேறிகளைப் பழிபோட்ட டிரம்பை வெளுத்து வாங்கிய மேக்ரான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முட்டாள்தனம்.. பச்சைப் பொய்..” பிரான்ஸ் கலவரத்தில் குடியேறிகளைப் பழிபோட்ட டிரம்பை வெளுத்து வாங்கிய மேக்ரான்..!!

Published

on

பிரான்சில் நடக்கும் போராட்டங்களுக்கும் வன்முறைக்கும் புலம்பெயர்ந்தவர்களே காரணம் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக பிரான்சின் உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வெளிநாட்டு தலைவர்களின் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் முட்டாள்தனமானவை என்றும் அதிபர் மேக்ரான் கடுமையாக சாடியுள்ளார். விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் கல்வி அமைப்பில் உள்ள பிரச்சனைகள் காரணமாக விரக்தியடைந்த பிரான்ஸ் மக்கள் கடந்த வாரம் முதல் வீதியில் இறங்கி போராடி வரும் நிலையில், இதில் வன்முறை ஏற்பட்டதால் அரசு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளது.

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்சில் நடக்கும் கலவரங்களுக்கு குடியேறிகளே காரணம் என்றும், பாரிஸ் விரைவில் ஒரு இஸ்லாமிய நகரமாக மாறும் என்றும் சாடியிருந்தார். இந்நிலையில் தனது வளைகுடாப் பயணத்தின் முடிவில் கத்தாரில் செய்தியாளர்களை சந்தித்த மேக்ரான், “பிரான்சில் ஒருபோதும் நடக்காத நிகழ்வுகளைச் சித்தரிக்கும் படங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் தலைவர்கள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பிரான்ஸை பயன்படுத்துகிறார்கள். எங்கள் நாடு, குடியேறிகள் மற்றும் முஸ்லிம்களின் பெருங்கூட்டத்தால் தாக்கப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் ஒரு பொய். அவர்களின் அறிக்கைகள் முட்டாள்த்தனமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று கூறியுள்ளார்.

Advertisement

அந்தக் கூற்றை அவர் டிரம்ப்பை நோக்கி சொல்கிறாரா என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மேக்ரான், “அவரை மற்றவர்களுடன் சேர்த்துக்கொள்ளலாம்” என்று பதிலளித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த மாதம் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரான்சில் நிலவும் இந்த போராட்டம் மற்றும் அரசியல் சூழல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in