LATEST NEWS
இவங்க தான் மெட்ராஸ் திரைப்பட புகழ் கலையரசனின் மனைவி, குழந்தை… வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கலையரசன்.
இவர் முதன்முதலில் பா ரஞ்சித் இயக்கிய கார்த்திக் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதேசமயம் மெட்ராஸ் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதை கலையரசன் வென்றார்.
இவர் முதலில் வெப் சீரிஸ் களில் அடித்து வந்த நிலையில் அதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கினார். 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
2008 ஆம் ஆண்டு அர்ஜுனனின் காதலி என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் பணியாற்றினார்.
அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி மற்றும் 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் ஆகிய திரைப்படங்களில் இவர் சேமியா ரோலில் நடித்தார்.
இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான திரைப்படம் மெட்ராஸ். அந்த திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.
இவர் ஃபிலிம் ஃபார் விருதுகள் மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் உள்ளிட்டா பல விருது நிகழ்ச்சிகளில் பரிந்துரைக்கப்பட்டவர். இவர் 2019 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பேட்ட திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்த சிங்கார் சிங் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர்.
பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்திலும் தீபன் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வெற்றி செல்வன் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
சமீபத்தில் அரசியல் திரில்லர் தொலைக்காட்சி தொடரான செங்கலம் என்ற திரைப்படத்தில் இவர் ராயர் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இப்படி சினிமாவில் பிசியான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அதிதி என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
தற்போது நடிகர் கலையரசனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
