சாக்லேட் பாய் மாதவன் திருமணம் செய்ய விரும்பிய பிரபல நடிகை யார் தெரியுமா…? அவரே பகிர்ந்த தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாக்லேட் பாய் மாதவன் திருமணம் செய்ய விரும்பிய பிரபல நடிகை யார் தெரியுமா…? அவரே பகிர்ந்த தகவல்..!!

Published

on

பிரபல நடிகரான மாதவன் மணி ரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைyடுத்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட திரைப்படங்களில் மாதவன் நடித்துள்ளார்.

 

Advertisement

கன்னத்தில் முத்தமிட்டால், ரன், ஆயுத எழுத்து, இறுதி சுற்று உள்ளிட்ட பல்வேறு படங்கள் மாதவனுக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்களால் சாக்லேட் பாய் என அழைக்கப்படும் மாதவன் நடிப்பில் ரயில்வே மேன் என்ற இந்தி வெப் சீரிஸ் வெளியானது.

அதில் நடிகை ஜூஹி சாவ்லா நடித்துள்ளார். இது தொடர்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மாதவன் பேசிய போது ஹிந்தியில் நடிக்க வந்தபோது தனக்கு இருந்த ஒரே ஆசை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த 1988-ஆம் ஆண்டு ஜூஹி சாவ்லா நடிப்பில் வெளியான கையாமத் சே காயாமத்தக் படத்தை பார்த்து அவரது அழகில் மயங்கி அம்மாவிடம் நான் ஜூஹி சாவ்லாவை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறேன் என மாதவன் கூறியுள்ளார். அதிர்ஷ்டவசமாக பல வருடம் கழித்து அவருடன் வெப் சீரிஸில் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என மாதவன் கூறியுள்ளார். அவரது பேச்சு தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in