LATEST NEWS
வேற லெவலில் கணவரின் பிறந்த நாளை கொண்டாடிய மைனா நந்தினி… வெளியான புகைப்படம்…!!!
விஜய் டிவி என்று சொன்னவுடன் பலரின் நினைவுக்கு வருவது மைனா நந்தினி தான்.இவர் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கொள்ளை அடித்தவர். கட்டாயம் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.அதனைத் தொடர்ந்து நடிகர் சிவக்கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்திலும் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதனிடையே சீரியல் நடிகர் மற்றும் நடன இயக்குனரான யோகேஸ்வரன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் தனது கணவரின் பிறந்தநாளுக்கு மயிலாநந்தினி வெளிநாடு சென்றுள்ளார். தனது கணவர் மற்றும் மகனுடன் இணைந்து மைனா நந்தினி லடாக் டூர் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மைனா நந்தினி வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
