புற்றுநோயால் பாதிப்பு, விவாகரத்து என அடுத்தடுத்து கஷ்டங்களை அனுபவித்த…. மனிஷா கொய்ராலா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா….??? – cinefeeds
Connect with us

LATEST NEWS

புற்றுநோயால் பாதிப்பு, விவாகரத்து என அடுத்தடுத்து கஷ்டங்களை அனுபவித்த…. மனிஷா கொய்ராலா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா….???

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் ஹிந்தி நடிகையாக இருந்தாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் பல வருடங்களுக்குப் பிறகு தனுஷின் மாப்பிள்ளை படத்தில் கம் பேக் கொடுத்தார். அதன் பிறகு இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு பல வருடங்களாக போராடி வந்தார். தனது வாழ்க்கை பற்றி இவர் ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.

Advertisement

சினிமாவில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இவர் அதிக நேரம் பார்ட்டியில் இருப்பார். ஒரு கட்டத்தில் இவர் போதைக்கு அடிமையாகி அனைத்து நேரங்களிலும் குடித்துள்ளார். குடித்து தன் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக அளித்து கொண்ட இவர் அதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார்.

தற்போது இவர் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு சாம்ராட் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடங்களில் விவாகரத்து பெற்று விட்டார்.

Advertisement

இந்நிலையில் தற்போது மனிஷா கொய்ராலா இயக்குனர் மணிரத்தினம் மற்றும் சுகாசினி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in