புதிய சீரியலை தொடங்கும் மிர்ச்சி செந்தில்…. ஜோடியாக நடிகை நித்யா ராம்…. வைரலாகும் பூஜை புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புதிய சீரியலை தொடங்கும் மிர்ச்சி செந்தில்…. ஜோடியாக நடிகை நித்யா ராம்…. வைரலாகும் பூஜை புகைப்படங்கள்….!!!!

Published

on

ஆர் ஜே வாக மிகப்பெரிய அளவில் இலட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர் தான் செந்தில்.

அதன் பிறகு இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

அதன் பிறகு விஜய் டிவியில் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார்.கடந்த வருடம் நிறைவு பெற்ற நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலிலும் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

 

Advertisement

அந்த சீரியலுக்குப் பிறகு செந்தில் புதிய சீரியல் எதுவும் தொடங்காமல் இருந்தார். அதனால் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் தற்போது செந்தில் ஜீ தமிழுக்காக அண்ணா என்ற சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா ராம் நடிக்கிறார். இன்று அந்த தொடரின் பூஜை நடந்து முடிந்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

எனவே ஜீ தமிழில் விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்படும் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in