LATEST NEWS
தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர், நடிகைகள் இறுதியாக நடித்த திரைப்படங்கள்… இதோ சிறப்பு தொகுப்பு…!!
பொதுவாக சினிமா நடிகர் நடிகைகளை பொருத்தவரை அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்த பிறகும் அவர்கள் நடித்த படங்கள் மூலமாக எப்போதும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதன்படி முன்னணி நடிகர் நடிகைகள் அவர்கள் இறப்பதற்கு முன்பு இறுதியாக தமிழில் நடித்த படங்கள் என்னவென்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நடிகர் பாண்டியன்:
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகர் பாண்டியன் 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் புதுசு கண்ணா புதுசு.
காதல் தண்டபாணி:
நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தண்டபாணி. இவர் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு உயிரிழந்த இவர் இறுதியாக நடித்த திரைப்படம் உன்னை தொட்டுக் கொள்ளவா.
நடிகை ஸ்ரீவித்யா:
80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீவித்யா கடந்த 2006 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் தமிழில் இறுதியாக நடித்த திரைப்படம் லண்டன்.
நடிகை பிரத்யுக்ஷா:
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த நடிகை பிரத்யுக்ஷா 2002 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் தமிழில் இறுதியாக நடித்த திரைப்படம் சவுண்ட் பார்ட்டி.
நடிகர் கலாபவன் மணி:
தமிழில் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் காமெடியிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகர் கலாபவன் மணி கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் தனியாக புதுசா நான் பொறந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகை சுஜாதா:
80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சுஜாதா அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர்களது 2011 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இறுதியாக வரலாறு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் சிட்டிபாபு:
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக சிட்டிபாபு கடந்த 2013 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இவர் இறுதியாக இன்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகை சௌந்தர்யா:
தமிழ் சினிமாவின் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகை தான் சௌந்தர்யா. அவர் ஒரு விமான விபத்தில் 2004 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இறுதியாக சொக்கத்தங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் மணிவண்ணன்:
தமிழில் என்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகர் தான் மணிவண்ணன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இவர் இறுதியாக நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகை மோனல்:
பிரபல நடிகையான சிம்ரனின் உடன்பிறந்த தங்கையான மோனல் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவர் இறுதியாக பேசாத கண்ணும் பேசுமே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் முரளி:
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பல திரைப்படங்களில் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகர் முரளி கடத 2010 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இறுதியாக பானா காத்தாடி திரைப்படத்தில் தனது மகன் அதர்வாவுடன் இணைந்து நடித்திருந்தார்.
நடிகர் ரகுவரன்:
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இறுதியாக யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகை மனோரமா:
தமிழ் சினிமாவில் ஆச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட நடிகை மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இறுதியாக சிங்கம் 3 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் விவேக்:
சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விவேக் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இறுதியாக லெஜன்ட் சரவணன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் விரைவில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.
நடிகர் மனோபாலா:
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் மற்றும் இயக்குனரான மனோபாலா கடந்த மே மாதம் திடீரென உயிரிழந்த நிலையில் அவர் இறுதியாக கதிர்வேல் இயக்கத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் மயில்சாமி:
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான மயில்சாமி சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் இவர் இறுதியாக கிளாஸ்மேட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
