என்னோட செருப்பு சைஸ் 41, நேரில் வரியா?…. நெட்டிசன் செயலால் கோபத்தில் கொந்தளித்த குஷ்பு…. வைரல் பதிவு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னோட செருப்பு சைஸ் 41, நேரில் வரியா?…. நெட்டிசன் செயலால் கோபத்தில் கொந்தளித்த குஷ்பு…. வைரல் பதிவு….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பூ. 80களில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர். சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் அரசியலில் குதித்தார். மறுபக்கம் தனது கணவர் சுந்தர் சி மற்றும் 2 பெண் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் வாரிசு திரைப்படத்தில் கூட நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் அவரின் மூத்த சகோதரர் உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடி வருவதாக குஷ்பு கூறி இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் சகோதரர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அந்த சோக செய்தியை தனது சகோதரனின் பயணம் இன்றுடன் முடிவடைந்து விட்டது என்று குறிப்பிட்டு குஷ்பூ ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

Advertisement

இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர், அக்காவுக்கு சின்ன தம்பி ஞாபகம் வந்துடுச்சு என்று கிண்டலாக பதிவிட்டார். அந்தப் பதிவை பார்த்து செம்ம கடுப்பான குஷ்பூ, என்னுடைய செருப்பு சைஸ் 41 தைரியம் இருந்தால் நேரில் வா, இதுதான் உங்க கீழ்த்தனமான புத்தி மாறவே மாட்டீங்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனைப் பார்த்து அந்த நபர் உடனே டெலிட் செய்து விட்டார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in