நான் அவன் இல்லை ஜீவன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா?… நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் நட்டியுடன் ரீ என்ட்ரி…. வைரல் புகைப்படங்கள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் அவன் இல்லை ஜீவன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா?… நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் நட்டியுடன் ரீ என்ட்ரி…. வைரல் புகைப்படங்கள்….!!

Published

on

தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் ஜீவன். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான யூனிவர்சிட்டி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

அதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

Advertisement

இந்த திரைப்படம் இவரின் திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

அதன் பிறகு இவர் நடித்த திருட்டுப் பயலே மற்றும் நான் அவன் இல்லை உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவன் அதன் பிறகு ஹீரோவாக மச்சக்காரன் திரைப்படத்தில் நடித்தார். இவர் இறுதியாக 2015 ஆம் ஆண்டு அதிபர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து அசரீரி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.

Advertisement

அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

Advertisement

அதாவது இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் நட்டி உடன் இணைந்து ஜீவன் நடிக்கின்றார்.

இந்த படத்தை எம்10 ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் தொடக்க விழா கடந்த வருடம் நடைபெற்றது.

Advertisement

திரைப்படத்தின் முதல் காட்சியை இயக்குனர் ஹரி தொடங்கி வைத்தார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ஜீவனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in