LATEST NEWS
தென்னிந்திய பணக்கார நடிகர்கள் பட்டியல்… விஜய், ரஜினியை லிஸ்டில் முந்திய பிரபல நடிகர்… 3000 கோடி சொத்துக்கு அதிபதி..!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகர்கள் பலரும் தற்போது 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள். விஜய் மற்றும் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு இணையாக தெலுங்கு நடிகர் பிரபாஸ் மட்டுமே 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். மற்றபடி வேறு எந்த ஒரு நடிகரும் அந்த அளவிற்கு சம்பளம் வாங்கவில்லை. இப்படியான நிலையில் தென்னிந்தியாவின் பணக்காரன் நடிகர்கள் பட்டியலில் மேற்கண்ட நான்கு நடிகர்களும் முதல் ஐந்து இடத்தை கூட பிடிக்கவில்லை.
இவர்களை மிஞ்சும் அளவிற்கு பணக்கார நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவரின் மொத்த சொத்து மதிப்பு 3000 கோடியாகும். இவர் தன்னுடைய ஒரு திரைப்படத்திற்கு 20 கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வாங்குகிறார். விளம்பரங்களுக்கு 2 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கும் இவர் சினிமா வெறும் சைடு பிசினஸ் ஆக வைத்துக் கொண்டு பல தொழில்களை செய்து வருகின்றார்.
திறமையான தொழில் அதிபராக திகழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவர் இத்தனை கோடி சொத்துகளுக்கு அதிபதியாக உள்ளார். அதாவது அன்னபூர்ணா பிலிம் ஸ்டூடியோவில் பார்ட்னர், ஹைதராபாத்தில் மீடியா ஸ்கூல், டிவி சேனல் எடா பல தொழில்களில் முதலீடு செய்து வருவதன் மூலம் இவருக்கு இவ்வளவு சொத்து மதிப்பு உள்ளது. பணக்காரன் நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தை நாகார்ஜுனா பிடித்துள்ள நிலையில் அடுத்ததாக இரண்டாவது இடத்தை வெங்கடேஷ் என்ற தெலுங்கு நடிகர் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 2200 கோடி.
அடுத்ததாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு 1650 கோடி சொத்து மதிப்பு உள்ளது. அடுத்ததாக ராம்சரண் 1370 கோடி சொத்துடன் நான்காம் இடத்தில் உள்ளார். அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் 450 கோடி சொத்துக்களுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். பணக்காரன் நடிகர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களையும் தெலுங்கு நடிகர்கள் பிடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகரான விஜய் 445 கோடி சொத்து மதிப்புடன் ஆறாவது இடத்தையும், ரஜினி 430 கோடி சொத்துடன் ஏழாவது இடத்தையும், கமல்ஹாசன் 388 கோடி சொத்துடன் பத்தாவது இடத்தில் உள்ளனர்.
