அவரால தான் என் ஒட்டு மொத்த கேரியரும் போச்சு.. பல வருட வேதனையை பகிர்ந்த நடிகர் பரத்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அவரால தான் என் ஒட்டு மொத்த கேரியரும் போச்சு.. பல வருட வேதனையை பகிர்ந்த நடிகர் பரத்..!!

Published

on

தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பரத். தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பரத் முதன்முதலில் சினிமாவில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து செல்லமே, காதல், வெயில் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதிலும் குறிப்பாக இவர் காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகின் உச்சத்திற்கு சென்றார்.

அதன் பிறகு இவர் மலையாளத்தில் நடித்த டி 4 பீப்பிள் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானார். இந்நிலையில் பரத்தின் 50வது திரைப்படம் லவ் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பரத், நான் நடித்து வெளியான நேபாளி படத்தில் படுக்கை அறை காட்சிகள் இருக்கும்.

Advertisement

அதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகமாக வரவில்லை. நேபாளி படம் வெளியான அதே சமயத்தில்தான் ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படமும் வெளியானது. அந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்ததால் நேபாளி படம் தோல்வியடைந்ததோடு தன்னுடைய கேரியரும் சரியா தொடங்கியது என வர தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in