“காசு இல்லாம கணவரை காப்பாத்த முடியல”… என் வாழ்க்கை இப்படி போனதுக்கே வடிவேலு தான் காரணம்… காமெடி நடிகை எமோஷனல் ஸ்பீச்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காசு இல்லாம கணவரை காப்பாத்த முடியல”… என் வாழ்க்கை இப்படி போனதுக்கே வடிவேலு தான் காரணம்… காமெடி நடிகை எமோஷனல் ஸ்பீச்..!!

Published

on

தமிழ் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து காமெடி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை பிரேமப்ரியா. இவர் குறிப்பாக வடிவேலுவுடன் சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் சில வருடங்களாக பல சோகங்களை சந்தித்து வருகிறார். அதாவது அப்பா மற்றும் கணவர் என அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள் இவரை தனிமையில் கொண்டு சென்றதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவர் அளித்த பேட்டியில், கணவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு கால் எடுக்கும் நிலைக்கு சென்றார். அதன் பிறகு பணம் இல்லாமல் அவரைக் காப்பாற்ற முடியாமல் இறந்து விட்டார். என்னை பாசத்துடன் பார்த்து வந்தவர் கணவர் என கூறினார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு தன்னை வளர விடாமல் என்னை இந்த நிலைக்கு மாற்றிவிட்டார் என்றும் அவரால்தான் என் வாழ்க்கையே போற்றி எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

ஒரு நம்பரில் இருந்து மறுப்பு சொல்லி வீடியோ போடணும் என்று சொன்னாங்க, ஆனா நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். முன்பு மீடியா வசதி இல்லை. எனக்கும் வடிவேலுக்கும் மீ டூ பிரச்சனை இல்லையே என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த சோகமான செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in