LATEST NEWS
தமிழ் நடிகைகளின் சொந்த ஊர் மற்றும் மாநிலங்கள் எது தெரியுமா?… இதோ முழு பட்டியல்….!!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அதேசமயம் தமிழில் நடிக்கும் பல நடிகைகளும் அப்படியே தமிழகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. தென்னிந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏன் வட மாநிலங்களில் இருந்தும் கூட தமிழில் நடித்து சாதித்துள்ளனர். அப்படி நடிகைகளின் சொந்த மாநிலங்கள் எது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை ஸ்ரீதிவ்யா:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதிவ்யா தற்போது எந்த திரைப்படத்திலும் நடிப்பதில்லை. இவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்.
நடிகை கேத்தரின் தெரசா:
தமிழ் சினிமாவில் கேரள நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர். அப்படி பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கேத்தரின் தெரசா கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.
நடிகை திரிஷா:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்திருக்கும் நடிகை திரிஷா தற்போது குந்தவையாக அனைவரும் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவர் பிறந்த ஊர் சென்னை என்றாலும் இவருக்கு சொந்தமான மாநிலம் கேரளா தான்.
நடிகை நிக்கி கல்ராணி:
சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை நிக்கி கல்ராணி தற்போது கிளாமர் போட்டோ ஷூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் பிறந்த ஊர் பெங்களூரு என்றாலும் இவருக்கு சொந்தமான மாநிலம் கர்நாடகா தான்.
நடிகை சமந்தா:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தாவுக்கு உலக அளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் பிறந்த ஊர் சென்னை என்றாலும் இவருக்கு சொந்தமான மாநிலம் ஆந்திரா.
நடிகை நயன்தாரா:
தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கலக்கி கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்த ஊர் பெங்களூர் என்றாலும் இவருக்கு சொந்த மாநிலம் கேரளா தான்.
நடிகை தன்யா ரவிச்சந்திரன்:
சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான தன்யா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் பிறந்த ஊர் சென்னை. இவரின் சொந்த மாநிலம் தமிழ்நாடு.
நடிகை ரெஜினா கசேந்ரா:
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரெஜினா பிறந்த ஊர் சென்னை தான். இவருக்கு சொந்தமான மாநிலம் தமிழ்நாடு.
நடிகை நந்திதா ஸ்வேதா:
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் குமுதா என அனைவராலும் அடையாளம் காணப்படுகிறார். நந்திதா பிறந்த ஊர் பெங்களூர். இவரின் சொந்த மாநிலம் கர்நாடகா.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்:
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பிறந்த ஊர் புதுடெல்லி. இவருக்கு சொந்தமான மாநிலம் பஞ்சாப்.
நடிகை ஹன்சிகா மோத்வானி:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ஹன்சிகா சமீபத்தில் தொழிலதிபரை திருமணம் முடித்த நிலையில் திருமண த்திடித்து வருகிறார். இவர் பிறந்த ஊர் மும்பை. இவருக்கு சொந்த மாநிலம் மகாராஷ்டிரா.
நடிகை ஜோதிகா:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் சூர்யாவின் மனைவியும் ஆன நடிகை ஜோதிகா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் மும்பை.
நடிகை காஜல் அகர்வால்:
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் பிறந்த ஊர் மும்பை. இவரின் சொந்த மாநிலம் பஞ்சாப்.
நடிகை அமலாபால்:
பிரபல நடிகையான அமலாபால் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர்.
நடிகை தமன்னா:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் பிறந்த ஊர் மும்பை. இவருக்கு சொந்த மாநிலம் மகாராஷ்டிரா.
