மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஓட்டு போட்ட காந்தாரா பட நடிகர்…. வெளியான புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஓட்டு போட்ட காந்தாரா பட நடிகர்…. வெளியான புகைப்படங்கள்…!!!

Published

on

மிகக் குறைந்த செலவில் உருவான கன்னட திரைப்படமான காந்தாரா கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தின் மூலம் ஓவர் நைட்டில் இந்திய அளவில் பிரபலமானவர்தான் நடிகர் ரிஷப் செட்டி. இதனைத் தொடர்ந்து காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளதாகவும் பல வருடங்களுக்கு முன்பு தெய்வத்தின் பின்னணி குறித்து அதில் சொல்லப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருமா அல்லது இதய ஆட்சி தொடருமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இந்த தேர்தலில் திரை உலக பிரபலங்கள் அனைவரும் தங்கள் ஓட்டுக்களை செலுத்தியது மட்டுமல்லாமல் மக்களையும் ஓட்டு சாவடிக்கு வந்து ஓட்டளிக்க உற்சாகப்படுத்தினர்.

Advertisement

அவ்வகையில் தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வரிசையில் நின்று தனது ஓட்டை ரிஷப்செட்டி செலுத்தினார். நாம் ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்கிறோம் என்பதற்காக ஒருமைப்பட வேண்டும் என கூறிய அவர் மக்களோடு மக்களாக நின்று ஓட்டு போட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in