LATEST NEWS
அடப்பாவிங்களா… உங்க பொறாமைக்கு அளவே இல்லையா..? ராத்திரி எடுத்த வண்டிக்குக் காலையில வந்த சோதனையைப் பாருங்க..! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
புதிதாக வாங்கிய கார் ஒன்றின் மீது கீறல்கள் ஏற்படுத்தப்பட்ட சம்பவம் குறித்த 13 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகமான ‘X’-இல் வைரலாகி பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. இரவில் புதிய மாருதி காரின் முன் உறவினர்களுடன் சேர்ந்து தேங்காய் உடைத்துக் கொண்டாடும் காட்சிகளும், மறுநாள் காலையில் கார் முழுவதும் கூர்மையான பொருளால் கீறல்கள் நிறைந்திருக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவம் எங்கு நடந்தது மற்றும் அது ஒரே கார்தானா என்பது பற்றிய விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அண்டை வீட்டாரின் பொறாமை காரணமாகவே இந்தச் செயல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் காணொளிக்கு சமூக ஊடக பயனர்களிடமிருந்து பலவிதமான கருத்துகள் குவிந்து வருகின்றன. ஒரு பயனர், “பொது இடத்திலோ அல்லது சொந்த வாகன நிறுத்துமிடத்திலோ எங்கு நிறுத்தினாலும் மக்கள் பொறாமைப்படுகிறார்கள்; இந்தியாவில் ஒருவர் அடையும் வெற்றியையும் கடின உழைப்பையும் மற்றவர்களால் ஜீரணிக்க முடிவதில்லை” என்று கூறி, தானும் இதுபோன்ற அனுபவத்தைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலர், மக்கள் பொறாமை மற்றும் வெறுப்பு போன்ற மனப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கார் உரிமையாளருக்கு ஆதரவாகத் தங்களது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளனர்.
அதேவேளையில், பயனர்களில் மற்றொரு பிரிவினர் இந்தச் சம்பவத்திற்கு வாகன நிறுத்துமிடத் தகராறே காரணமாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். பக்கத்து வீட்டினருக்குச் இடையூறாக வாகனத்தை நிறுத்தியதால் இது நடந்திருக்கலாம் என்றும், போதிய இடவசதி இல்லாதவர்கள் கார்களை வாங்கக் கூடாது என்றும் அவர்கள் வாதாடுகின்றனர். சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவற்றைச் சேதப்படுத்துவதை நியாயப்படுத்தும் வகையிலும் சில கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. இறுதியாக, கார் உரிமையாளர் தன்னைச் சுற்றியுள்ள நண்பர்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சிலர் அறிவுறுத்தியுள்ளனர்.
