பிக்பாஸ் வீட்டில் புதிய ட்விஸ்ட்…. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய பிரபல போட்டியாளர்கள்…. வெளியான லிஸ்ட்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் வீட்டில் புதிய ட்விஸ்ட்…. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய பிரபல போட்டியாளர்கள்…. வெளியான லிஸ்ட்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது கடுமையான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார்.  இந்நிலையில் 15 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெறும் நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் என்று பிக் பாஸ் அறிவிக்க எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

அவ்வாறு இந்த வாரம் தமது காரணத்தை கூறி ஒவ்வொரு போட்டியாளரும் நாமினேட் செய்துள்ளனர். அவ்வகையில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தனலட்சுமி, அசீம், ராம், மணிகண்டன், அமுதவாணன், கதிரவன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் நாமினேஷனில் சிக்கி உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in