LATEST NEWS
“இதுதான் டீல் மை டியர்”… பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன் – தீபிகா வெளியிட்ட புகைப்படம்… காதலை உறுதி செய்த ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அண்ணன் தம்பி மற்றும் கூட்டு குடும்ப கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் இதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சீரியலில் அண்ணன் தம்பி பிரிவுகள் நிகழ அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் முதலில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் விஜே தீபிகா. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவர் சீரியலை விட்டு பாதியிலேயே வெளியேறினார். சமீபத்தில் சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகாவே நடிக்க தொடங்கியுள்ளார்.
இவரின் நெருங்கிய நண்பர் சரவணன் விக்ரம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சரவணன் விக்ரம் தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடைக்குட்டி கண்ணன் கதாபாத்திரத்தில் தீபிகாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். தீபிகாவும் சரவண விக்ரமும் சேர்ந்து இணையத்தை கலக்கி வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் பேசினாலும் இவர்கள் இதுவரை அதனை உறுதிப்படுத்தவில்லை. தற்போது தீபிகா சரவண விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்டோரியில் பகிர்ந்து நாம் ஒன்றாக இருக்க வேண்டும் அதுதான் டீல் மை டியர் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் காதலை உறுதிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
