LATEST NEWS
இணையத்தை தெறிக்க விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ்…. கண்ணன் – ஐஸ்வர்யா ஜோடியின் க்யூட் புகைப்படங்கள்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அண்ணன் தம்பி மற்றும் கூட்டு குடும்ப கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால் இதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது சீரியலில் அண்ணன் தம்பி பிரிவுகள் நிகழ அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் முதலில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் விஜே தீபிகா.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவர் சீரியலை விட்டு பாதியிலேயே வெளியேறினார். அதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.
அதன் பிறகு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகாவிற்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த காயத்ரி நடித்து வந்தார்.
அதே சமயம் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகா மாற்றப்பட்டதற்கு அவரின் முகத்தில் இருந்த பருக்கள் தான் காரணம் எனவும் கூறப்பட்டது.
ஆனால் தனக்கு இருந்த முகப்பரு பிரச்சனையை சரி செய்து தற்போது அழகில் ஜொலிக்கிறார் தீபிகா.
பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு பிறகு தொடர்ந்து பல சீரியல்களில் கெஸ்ட் ரோலில் இவர் நடித்து விட்டார்.
மேலும் சித்திரம் பேசுதடி மற்றும் ஜில்லுனு ஒரு காதல் என இவர் நடித்த சீரியல்களில் செம க்யூட்டான தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
அதே சமயம் தனியாக யூடியூப் சேனல் தொடங்கியுள்ள தீபிகா அதில் பல வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகாவே நடிக்க தொடங்கியுள்ளார்.
இவரின் நெருங்கிய நண்பர் சரவணன் விக்ரம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சரவணன் விக்ரம் தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடைக்குட்டி கண்ணன் கதாபாத்திரத்தில் தீபிகாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தீபிகாவும் சரவண விக்ரமும் சேர்ந்து இணையத்தை கலக்கி வருகிறார்கள். அதாவது விதவிதமான போட்டோ சூட் எடுத்து அவர்கள் பகிர்ந்து உள்ள நிலையில் இவர்களின் காம்போ பயங்கர ஹிட் அடித்துள்ளது.
இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
