LATEST NEWS
மகனுடன் சேர்ந்து ராதிகா – சரத்குமார் ஒன்றாக எடுத்துக் கொண்ட… சில அழகிய புகைப்படங்கள் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஃபிலிம் பேர் விருதுகள் மற்றும் மாநில விருதுகள் என்று பல நூறு விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராதிகா எம் ஆர் ராதாவின் மகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
இந்நிலையில் ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
சரத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்குமார் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் தான் வரலட்சுமி மற்றும் பூஜா. அதன் பிறகு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2004 ஆம் ஆண்டு ராகுல் என்ற மகனும் பிறந்தார்.
இவர்களின் மகன் ராகுல் கடந்த வருடம் பட்டப்படிப்பை முடித்தார். யுனைடெட் வேர்ல்ட் காலேஜ் ஆப் சவுத் ஈஸ்ட் ஆசியா என்ற கல்லூரியில் அவர் பட்டம் பெற்ற நிலையில் அது தொடர்பான பல புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இது ஒரு பக்கம் இருக்க ராகுல் ஏற்கனவே சினிமாவில் கூட களம் இறங்கி இருந்தார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் ராகுல் ரா சன் டேக் ஆப் என்ற ராப் பாடலை பாடியிருந்தார்.
இந்தப் பாடலை ராகுல்தான் எழுதியிருந்தார். இந்நிலையில் தனது மகனுடன் சேர்ந்து ராதிகா சரத்குமார் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.
