LATEST NEWS
பிரபல நடிகரை திடீரென திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகா மந்தனா?…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.
அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான். அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.இதனிடையே சமீபகாலம் அவர் ராஸ்மிகா மந்தனா மற்றும் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இது தொடர்பாக இருவருமே எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை. என் நிலையில் ரஷ்மிகா மந்தனாவிற்கு விஜய் தேவரகொண்டா உடன் திருமணம் நடந்து முடிந்து விட்டதாக ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது ராஷ்மிகா மந்தரா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் திருமணம் செய்து கொண்டது போல் ஃபேன் மேடு புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் உருவாக்கி அதனை இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
