“ஹன்சிகா கால் விரலை கூட தொட விடல”… பொதுவெளியில் ரோபோ சங்கரின் சர்ச்சை பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஹன்சிகா கால் விரலை கூட தொட விடல”… பொதுவெளியில் ரோபோ சங்கரின் சர்ச்சை பேச்சு..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஹன்சிகா தமிழில் பார்ட்னர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள நிலையில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது. மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் அப்போது ரோபோ சங்கர் ஹன்சிகா பற்றி பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது பார்ட்னர் திரைப்படத்தில் உள்ள முத்தக் காட்சியை அதிகமாக ரசிகர்கள் பார்ப்பீர்கள், ஹன்சிகா ஒரு மெழுகு சிலை, மைதா மாவை உருட்டி சுவற்றில் அடித்தால் ஒட்டிக்கொள்ளும் அவ்வாறே அவர்கள். ஹன்சிகாவின் காலை தடவும் படியான ஒரு காட்சி படத்தில் இருந்தது.

Advertisement

பொருள் ஒன்றை தொலைத்து விட்டு அதனை கீழே தேடும்போது அவரை முட்டிக்கு கீழே உள்ள காலை தடவ வேண்டும். அந்த காட்சியின் போது அவர் காலில் விழுந்து கூட கெஞ்சி பார்த்தேன், காலில் கட்டை விரலையாவது தடவிக் கொள்கிறேன் என கேட்க அவர் முடியாது என கூறிவிட்டார். ஹீரோ மட்டும்தான் தன்னை இவ்வாறு தொட வேண்டும் வேறு யாரும் தொடக்கூடாது என ஹன்சிகா வெளிப்படையாக கூறினார்.

அப்போது ஹீரோ ஹீரோதான் காமெடி என் ஓரமாகத்தான் இருக்கணும் என முகம் சுளிக்கும் அளவிற்கு ரோபோ சங்கர் பேசினார். இவ்வாறு ரோபோ சங்கர் பேசியுள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in