காதலரின் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற ரோபோ சங்கர் மகள் இந்திரஜா…. வெளியான புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதலரின் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற ரோபோ சங்கர் மகள் இந்திரஜா…. வெளியான புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் ரோபோ சங்கர்.இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறினார்.

முதன்முதலாக ஜீவாவின் ரௌத்திரம் திரைப்படத்தில் ரோபோ சங்கர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Advertisement

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த இவர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் தனது திருமண நாளை ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய புகைப்படங்களும் வெளியானது.

Advertisement

அவருடன் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.இவரின் மனைவி விஜய் டிவியின் குவித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றி வருகிறார்.

அதனைப் போலவே இவரின் மகள் இந்திரஜா சங்கரும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் விஜய் உடன் பிகில், கார்த்தி உடன் விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி வீடியோக்கள் மட்டும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் இந்திரஜா ரோபோ சங்கர் தனது காதலர் தொடர்வோம் கார்த்திக் உடன்  குலதெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in