LATEST NEWS
எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் கிழக்கு வாசல் சீரியல்…. நடிகை ராதிகா வெளியிட்ட ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…..!!!!
தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வெள்ளி திரையில் களம் கண்ட ராதிகா சின்னத்திரையிலும் இறங்கி அசத்தி மற்ற நடிகைகளுக்கு முன்மாதிரியாக மாறி உள்ளார்.
சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி மற்றும் சந்திரகுமாரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தற்போது ராதிகா பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் கூட ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 பட குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் கிழக்கு வாசல் என்ற சீரியலில் தான் நடிக்க உள்ளதாக ராதிகா ஒரு செய்தியை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
திருமதி செல்வம் சீரியல் புகழ் சஞ்சீவ் நடிக்கும் இந்த நாடகத்தில் விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் முன் நின்று இயக்க உள்ளார்.
பொதுவாக ராதிகா நடிக்கும் சீரியல்கள் அனைத்துமே சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிலையில் இந்த முறை கிழக்கு வாசல் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியலின் படபிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் இந்த சீரியலில் நடிகர் நாகேஷின் மகனான ஆனந்த்ராஜ், சின்னத்திரை நடிகை ரேஷ்மா உள்ளிட்ட பல பிரபலங்களும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
