LATEST NEWS
பொன்னியின் செல்வனில் சிறுவயது நந்தினியாக நடித்த சாராவின் தந்தை இவரா?…. இத்தன நாள் இது தெரியாம போச்சே….!!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன்.இதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 4நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் நந்தினி தான். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராய் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. நந்தினியின் சிறுவயது தோற்றத்தில் நடித்தவர் நடிகை சாரா அர்ஜூன்.
இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து சைவம் மற்றும் சில்லுகருப்பட்டி போன்ற திரைப்படங்களில் இவர் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே நடிகை சாராவின் தந்தையின் பெயர் ராஜ் அர்ஜுன். இவரும் ஒரு நடிகர் தான். இந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் தாண்டவம் மற்றும் வாட்ச்மேன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
