LATEST NEWS
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்…. வெளியான புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் திரைப்படம் ஏதாவது வெளியாகிறது என்றால் ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் செய்வது வழக்கம்.
அதனைப் போலவே இவரின் திரைப்படங்கள் குறித்த எந்த தகவல் மற்றும் அவரின் புகைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் அதனை இணையத்தில் அதிக அளவு வைரல் ஆக்கி வருவார்கள்.
சமீபத்தில் அஜித் நடித்த வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஏகே 62 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது.
துணிவு படத்தின் ரிலீஸுக்கு பிறகு அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் திடீரென விலகினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மயில் திருமேனி இயக்க உள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை இப்படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று அஜித் பிறந்த நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்களின் பதிவுகள் வைரலாகி வருகிறது.
