LATEST NEWS
மனைவி, மகள்களுடன் திருப்பதிக்குச் சென்ற சீரியல் நடிகர் ராஜ்கமல்…. வெளியான புகைப்படங்கள்….!!!
சன் டிவியில் ஒளிபரப்பான அபியும் நானும் என்ற சீரியல் குடும்பப் பெண்கள் மற்றும் சிறுவர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சீரியலில் அபி மற்றும் நிதிஷ் என்ற இரண்டு சிறுவர்கள் நடித்து வருகிறார்கள்.
அதில் அபியின் வளர்ப்பு தந்தையாக நடிப்பவர்தான் பிரபல சீரியல் நடிகர் ராஜ்கமல். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு டிவியில் நடிகராக அறிமுகமானார்.
அதன் பிறகு பல சீரியல்களில் தற்போது நடித்து வருகின்றார். சீரியல்களை தாண்டி சரோஜா, லிங்கா, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் சீரியல் நடிகை லதா ராவை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு பிரபல நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற உள்ளனர்.
இவரின் மனைவி நடிகை லதா ராவும் சீரியல்களின் மூலம் பிரபலமானவர்தான். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி, செல்வி மற்றும் திருமதி செல்வம் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ஜெயம் ரவியின் தில்லாலங்கடி திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார். இந்த தம்பதிக்கு தற்போது லாரா மற்றும் ராகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதி அடிக்கடி பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் சமீபத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று உள்ளனர்.
அது தொடர்பான புகைப்படங்களை ராஜ்கமல் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
