வளைகாப்பு விழாவில் வெள்ளை நிற புடவையில்… நிறைமாத வயிற்றுடன் ஜொலிக்கும் சீரியல் நடிகை நக்ஷத்ரா… வைரல் புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வளைகாப்பு விழாவில் வெள்ளை நிற புடவையில்… நிறைமாத வயிற்றுடன் ஜொலிக்கும் சீரியல் நடிகை நக்ஷத்ரா… வைரல் புகைப்படங்கள்…!!!

Published

on

பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா.

அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

Advertisement

அதனை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வந்தார். இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம்  இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

நட்சத்திராவின் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர்களின் திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது.

Advertisement

இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நட்சத்திரா அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கணவருடன் நிறைமாத வயிற்றுடன் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வைரலானது.

Advertisement

இந்நிலையில் நட்சத்திராவுக்கு மிக பிரம்மாண்டமாக சமீபத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றது.

அவரின் வளைகாப்பு விழாவில் நெருங்கிய தோழியான கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in