LATEST NEWS
சிம்ரன் To காஜல் அகர்வால்.. விஜய் மற்றும் அஜித்துடன் ரொமான்ஸ் செய்த ஏழு நடிகைகள்….
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் ரஜினி மற்றும் கமலஹாசன், அவர்களுக்கு பிறகு மிகவும் பிரபலமான நடிகர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள்.இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். நடிகர் அஜித் மற்றும் விஜய் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். அப்படி ஒரே ஹீரோயின் அஜித் மற்றும் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகைகளை பற்றி இதில் காண்போம்.
1.சிம்ரன்:
தமிழ் சினிமாவில் எவர்கிரீன் நடிகைகளில் ஒருவர் நடிகை சிம்ரன். இவர் நடிப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக அவள் வருவாளா, வாலி, உன்னை கொடு என்னைத் தருவேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘ஒன்ஸ் மோர்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பிரியமானவளே’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
2. திரிஷா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் அஜித் மற்றும் விஜய்யுடன் இணைந்து தலா நான்கு படங்களில் நடித்துள்ளார்.நடிகர் விஜயுடன் ‘கில்லி’ மற்றும் நடிகர் அஜித்துடன் ‘மங்காத்தா’ ஆகிய பிளாக் பஸ்டர் படங்களில் இவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
3.ஜோதிகா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘குஷி’, ‘திருமலை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.நடிகர் அஜித்துக்கு ஜோடியாக முகவரி, பூவெல்லாம் உன் வாசம், ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
4.ஷாலினி:
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஷாலினி. நடிகர் அஜித்துடன் அமர்க்களம் படத்திலும் நடிகர் விஜயுடன் காதலுக்கு மரியதை,கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களில் இவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
5.அனுஷ்கா:
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் ‘ரெண்டு’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை அனுஷ்கா. இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடித்தார். இவர் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்துள்ளார்.
6. தமன்னா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘சுறா’ படத்தில் நடித்துள்ளார்.நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ‘வீரம்’ படத்தில் நடித்துள்ளார்.
7.காஜல் அகர்வால்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘வேகம்’ படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
