LATEST NEWS
முதல்முறையாக இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி சின்மயி… செம க்யூட்டா இருக்காங்களே..!!
தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வளம் வருபவர் சின்மயி. ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் அறிமுகமானவர். அவரின் முதல் பாடலே ஹிட்டான நிலையில் அவரின் அடுத்தடுத்து பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்னர். அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான 96 என்ற படத்தில் இவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது.
இப்படி பல புகழுக்குரிய இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடிகர் ராகுல் என்பவரை காதலித்து வந்தார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ராகுலும் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
ஆனால் இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றி பெறவில்லை. 2018 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
குடும்ப வாழ்க்கையில் ராகுல் மற்றும் சின்மயி தம்பதியினருக்கு திருமணம் ஆகி 8 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் கடந்த வருடம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்திருப்பதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில் சின்மயி குழந்தைகள் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
