LATEST NEWS
சின்னத்திரை, வெள்ளி திரையில் கலக்கும் நடிகை மாளவிகா – அவினாஷின்…. அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் மாளவிகா அவினாஷ்.
இவர் தமிழ் சினிமாவுக்கு மாதவன் நடித்த ஜேஜே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் கன்னட சினிமாவில் கடந்த 1988 ஆம் ஆண்டிலேயே அறிமுகமானாலும் தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜேஜே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் நாயகியின் சகோதரியாக இவர் நடித்திருப்பார். அதன் பிறகு ஆதி,பைரவா மற்றும் கைதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் நுழைந்து கலக்கி வருகிறார்.
பல சீரியல்களில் அண்ணி, சிதம்பரம் ரகசியம், ராஜராஜேஸ்வரி மற்றும் அரசு என்ற பல சீரியல்களில் இவர் கலக்கியுள்ளார்.
இப்படி தொடர்ச்சியாக பல கேரக்டர் நூல்களில் நடித்து வருபவர் மாளவிகா அவினாஷ்.
இவர் கேஜிஎப் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதாவது அதில் இரண்டு பாகங்களிலும் கதை கேட்கும் நெறியாளராக இவர் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர் அதன் பிறகு சினிமாவுக்கு நடுவே தொடர்ச்சியாக கட்சி பணிகளையும் செய்து வருகிறார்.
இவரின் கணவர் பிரபல வில்லன் நடிகர் அவினாஷ் பல தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக நடிகர் விஜய் நடித்த திருமலை மற்றும் அஜித் நடித்த என்னை அறிந்தால் மற்றும் பரமசிவம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு அவினாஷ் மற்றும் மாளவிகா திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் தற்போது அவினாஷ் மற்றும் மாளவிகா தம்பதியின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
