11- வது திருமண நாளை கொண்டாடிய சினேகா – பிரசன்னா தம்பதி…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

11- வது திருமண நாளை கொண்டாடிய சினேகா – பிரசன்னா தம்பதி…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா.

இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

Advertisement

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

Advertisement

தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.

Advertisement

இதனிடையே சமீபத்தில்  நடிகை சினேகா பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவியது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகாவுடன் பிரசன்னா நெருக்கமாக இருப்பது போன்ற பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது .

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியினர் அடிக்கடி தங்களின் குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் நேற்று சினேகா பிரசன்னா தம்பதியினர் தங்களின் 11 வது திருமண நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான க்யூட்டான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in