VIDEOS
கண்ணீர் மல்க தந்தையின் காலில் விழுந்த சினேகாவின் அக்கா… மனதை கலங்க வைக்கும் வீடியோ…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.இவர் தமிழில் வெளிவந்த என்னவளே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதரிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இதனிடையே சினேகாவிற்கு சங்கீதா என்ற ஒரு அக்கா உள்ளார். அவர் சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னையில் சொந்தமாக boutique தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய boutique இல் தந்தையர் தினத்தையும், தன்னுடைய தந்தையின் 70வது பிறந்த நாளையும் அவர் கொண்டாடியுள்ளார்.
அதே சமயம் கண்ணீர் மல்க தந்தையின் காலில் விழுந்து சங்கீதா ஆசீர்வாதம் வாங்கிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
