LATEST NEWS
“எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாம்… ஆனா” பட்ஜெட் கூட்டத்தொடரில் பத்திரிகையாளர்கள் கேள்வி – சபாநாயகர் சுவாரசிய பதில்..!!
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக சபாநாயகர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பத்திரிகையாளர்கள், தமிழக முதல்வர் பேரவையில் சைகை காட்டியது போல, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் அவையில் சைகை காட்டலாமா என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாராக இருந்தாலும், அவையில் சைகை காட்டுவதற்கு முன்பாக என்னிடம் உரிய முன்அனுமதி பெற்றுவிட்டு தாராளமாகக் காட்டலாம் என்று நகைச்சுவையுடன் கூடிய விளக்கத்தை அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், அப்படியென்றால் முதல்வர் விஜய் உங்களிடம் முன்அனுமதி பெற்றாரா என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சபாநாயகர், “அவர் என்னிடம் அனுமதி கேட்கவில்லை; ஆனால் அவரது கையின் பொசிஷனைப் பார்த்தே நானாகவே சைகையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்” என்று சுவாரசியமாகத் தெரிவித்தார்.
