LATEST NEWS
சுஹாசினி – மணிரத்தினம் தம்பதியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான அன்சீன் புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஷாருஹாசனின் மகள் சுஹாசினி. இவர் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பாலைவனச்சோலை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன.
அந்த திரைப்படங்கள் இவரின் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திரைத்துறையில் நடிப்பில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருகிறார்.
80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நந்தன் மணிரத்தினம் என்ற ஒரு மகனும் உள்ளார்.இந்நிலையில் மணிரத்தினம் மற்றும் சுகாசினி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
