LATEST NEWS
சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ-யின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது தமிழ் சினிமாவில் பாடகர்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். தற்போது சூப்பர் சிங்கர் 9 சீசன் நடைபெற்று வருகிறது.
இப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாடகி நித்யஸ்ரீ.
இவர் முதன் முதலில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளிலும் நித்யஸ்ரீ பாடி வருகிறார்.
அதேசமயம் வெள்ளித்திரையிலும் நல்ல நல்ல பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வருகின்றார். சமீபத்தில் தனது சொந்த உழைப்பில் முதல் கார் வாங்கிய நிலையில், அதற்கு சென்னை பாடியில் உள்ள திருவாலிதாயம் திருக்கோயிலில் பூஜைப் போட்டார்.
இந்நிலையில் நித்ய ஸ்ரீ தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
