LATEST NEWS
கருப்பு நிற மாடர்ன் உடையில்…. ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் மானசி….!!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் மானசி. இவர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.
அதில் தன்னுடைய குரலால் பலரின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இவர் பாடுவது மட்டுமல்லாமல் நடனத்திலும் வல்லவர். ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பளிப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை இவர் பாடியுள்ளார்.
அந்தப் படத்தை தொடர்ந்து திரை துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதால் அவ்வப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்ற ராட்சச மாமனே என்ற பாடலைப் பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.
இதனிடையே போட்டோ சூட் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் இவர் தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
