இயக்குனர்களை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள் யார் யார் தெரியுமா?…. இதோ சிறப்பு தொகுப்பு….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இயக்குனர்களை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள் யார் யார் தெரியுமா?…. இதோ சிறப்பு தொகுப்பு….!!!

Published

on

சினிமாவை பொருத்தவரை திரைப்படங்களில் ஒன்றாக நடிக்கும் நடிகர் நடிகைகள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம்தான். அதிலும் சிலர் திரைப்படங்களில் நடிகைகளாக நடித்து தங்கள் திரைப்படங்களுக்கு இயக்குனராக இருந்தவர்களை திருமணம் முடித்துள்ளனர். அதன்படி தமிழ் சினிமாவில் இயக்குனர்களை திருமணம் முடித்த நடிகைகள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ரம்யா கிருஷ்ணன் – கிருஷ்ண வம்சி:

Advertisement

பிரபல இயக்குனரான கிருஷ்ண வம்சி இயக்கத்தில் சந்திரலேகா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். அதன் பிறகு இருவரும் 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

ராதிகா – பிரதாப் போத்தன்:

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்த வரும் ராதிகா தமிழில் பிரதாப் போத்தன இயக்கத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

சுகாசினி – மணிரத்தினம்

Advertisement

தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் தான் மணிரத்தினம். இவர் சமீபத்தில் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சுகாசினி மற்றும் மணிரத்தினம் தம்பதியினர் 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சரண்யா – பொன்வண்ணன்:

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் பொன்வண்ணன். இவர் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சரண்யாவை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அமலாபால் – விஜய்:

Advertisement

சினிமாவின் பிரபல இயக்குனரான விஜய் மற்றும் அமலாபால் இருவரும் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 2016ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

சோனியா அகர்வால் – செல்வராகவன்

Advertisement

நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகம் திறமை கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கும் செல்வராகவன் 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வால் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

 

Advertisement

ஸ்ரீதேவி – போனி கபூர்:

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் போனி கபூர் மற்றும் பிரபல நடிகையான ஸ்ரீதேவி இருவரும் 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி உயிரிழந்து விட்டார்.

Advertisement

ரேவதி – சுரேஷ் மேனன்:

80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ரேவதி இயக்குனர் சுரேஷ் மேனனை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது ரேவதி ஒரு மகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

Advertisement

குஷ்பூ & சுந்தர் சி:

90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த குஷ்பூ இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் உள்ளன.

Advertisement

சீதா – பார்த்திபன்:

புதியபாதை என்ற திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருப்பார்கள். அதன் பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். ஆனா கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2011 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

Advertisement

பிரியா – அட்லீ:

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கியவர் தான் நடிகை பிரியா. இவர் பிரபல இயக்குனரான அட்லீயை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார்.

Advertisement

நயன்தாரா – விக்னேஷ் சிவன்:

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

தேவயானி – ராஜகுமாரன்:

தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் உள்ளன.

Advertisement

ஷெர்லி தாஸ் -வேலு பிரபாகரன்

60 வயதான இயக்குனர் வேலு பிரபாகரன் ஷெர்லி தாஸ் என்ற நடிகையை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வேலு பிரபாகரன் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தில் இவர் நடித்த நிலையில் இவர்கள் இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in