LATEST NEWS
முதியோர் இல்லத்தில் ருத்ரன் திரைப்பட வெற்றியை கொண்டாடிய படக்குழு…. வெளியான புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ்.
இவர் தற்போது சந்திரமுகி 2 படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி 5 ஸ்டார் கிரியேஷன் எல்எல்பி பேனரின் தயாரித்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் இறுதியாக வெளியான ருத்ரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காஞ்சனா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு 10 வருட இடைவேளைக்கு பின்னர் ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இவர்களுடன் பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படம் எடுப்பதற்காக போட்ட மொத்த பணத்தையும் எடுத்து விட்டதால் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பட குழுவினருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர், இயக்குனர் பைவ் ஸ்டார் கதிரேசன், கதை ஆசிரியர் திருமாறன் மற்றும் நடிகர் இளவரசு ஆகியோர் சென்னையில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருந்தவர்களுடன் உரையாடி உணவு மற்றும் நன்கொடை என அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் கொடுத்து கொண்டாடியுள்ளனர்.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
