LATEST NEWS
ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தவறாமல் விஜய் செல்லும் முக்கிய இடம்…. எங்கு தெரியுமா….????
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் . இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் விஜய் திடீரென instagram பக்கத்தில் இணைந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தற்போது 5 மில்லியன் வரை பாலோயர்களை பெற்றுள்ளார். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.
இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி செம வெயிட்டான ஒரு அப்டேட் உள்ளது என தயாரிப்பாளர் லலித் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கூறினார். விஜய் தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாள் அன்று ஸ்பெஷலாக ஒரு இடத்திற்கு சென்று வருகிறார்.
அதாவது எழும்பூரில் உள்ள தாய் சேய் அரசு மருத்துவமனைக்குச் சென்று அன்று பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் அணிவார். 2011 ஆம் ஆண்டு வரை இதனை வழக்கமாக வைத்திருந்த விஜய் அதன் பிறகு தனது உதவியாளரை அனுப்பி இந்த விஷயத்தை தொடர்ந்து செய்து வருகின்றார்.
