LATEST NEWS
“மீண்டும் ஆட்டம் ஆரம்பம்..” அடுத்த புயல்.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! நவம்பர் 18 வரை தமிழகத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (நவ.12) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நவம்பர் 14-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, வரும் நவம்பர் 18-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
