அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவங்க தான்…. அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் 17 வயது இளம் நடிகை…. அவங்க யார் தெரியுமா….???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவங்க தான்…. அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் 17 வயது இளம் நடிகை…. அவங்க யார் தெரியுமா….????

Published

on

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது ஜவான் மற்றும் கனெக்ட், இறைவன் மற்றும் நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருப்பதாக சமீப காலமாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

லேட்டஸ்டாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்த ரசிகர்கள் பலரும் அப்படியே பார்ப்பதற்கு நயன்தாரா போல இருக்கிறார் என கூறி வருகின்றனர். அந்த நடிகை என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அணிகா தான். அப்படியே நயன்தாரா போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in