LATEST NEWS
“ரூ.50 தர முடியாதா..?” 30 நிமிஷம் வெயிட் பண்ண வச்சுட்டு ஆப்பு வச்ச பெண்…வெயிட்டிங் சார்ஜ் தராத பெண்ணுக்கு டிரைவர் கொடுத்த மரண மொக்கை..!இணையத்தை பிளக்கும் ரேபிடோ சம்பவம்..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, ரேபிடோ பைக் டாக்சி சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீடியோவில், ஒரு பெண் ரேபிடோ பைக்கை புக் செய்துவிட்டு, ஓட்டுநரை சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வைத்துள்ளார். பெண் வந்த பிறகு, செயலியில் காட்டும் கட்டணமான ரூ.150 மட்டுமே தருவேன் என்றும், காத்திருந்த நேரத்திற்கான கூடுதல் கட்டணத்தைத் தர முடியாது என்றும் தெளிவாகக் கூறிவிட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த ரேபிடோ ஓட்டுநர், தான் 30 நிமிடங்கள் காத்திருந்ததற்கு ரூ.50 வெயிட்டிங் சார்ஜ் கண்டிப்பாகத் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். நிறுவனம் தனக்கு சவாரி செய்வதற்கான கட்டணத்தை மட்டுமே வழங்கும் என்றும், இவ்வளவு நேரம் சும்மா காத்திருப்பதால் தனது நேரமும் வருமானமும் வீணாகிறது என்றும் ஓட்டுநர் வாதிட்டார். இருப்பினும், அப்பெண் கூடுதல் கட்டணம் செலுத்த மறுத்து தனது முடிவில் உறுதியாக இருந்ததால், ஆத்திரமடைந்த ஓட்டுநர் அந்தச் சவாரியைச் செய்ய முடியாது எனக் கூறி சவாரியை ரத்து செய்துவிட்டார்.
இந்த வீடியோ வெளியானது முதல் இணையத்தில் பயனர்கள் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சில பயனர்கள், வாடிக்கையாளர்கள் ஓட்டுநரை அரை மணி நேரம் காத்திருக்க வைத்தால், அந்த கூடுதல் நேரத்திற்கான கட்டணத்தை வழங்க வேண்டியது நியாயமே என்று ஓட்டுநருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளனர். 30 நிமிடங்களில் அந்த ஓட்டுநர் வேறு சவாரிகளை ஏற்றுச் சம்பாதித்திருக்க முடியும் என்பதால், மற்றவர்களின் நேரத்திற்கும் உழைப்பிற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
