LATEST NEWS
என் நிஜ பெயர் இதுதான்…. டெல்லி கணேஷ் என பெயர் வர இதுவே காரணம்…. உண்மையை உடைத்த நடிகர்….!!!!
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த மக்கள் மத்தியில் இடம் பிடித்த பிரபலங்களில் ஒருவர்தான் நடிகர் டெல்லி கணேஷ். இவர் முதன்முதலாக 1976 ஆம் ஆண்டு இயக்குனர் பாலசுந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் தற்போது வரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அடித்த பேட்டி ஒன்றில்,உங்களுக்கு டெல்லி கணேஷ் என்ற பெயர் வருவதற்கு காரணம் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், என்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த பாலசுந்தர் சினிமாவிற்கு தகுந்த மாதிரி உன்னுடைய பெயரை மாற்றிக்கொள் என்று என்னிடம் கூறினார்.
அதேசமயம் அவர் என்னிடம் நீ டெல்லியில் பல நாடகங்களில் நடித்திருப்பதால் உன் பெயரை டெல்லி கணேஷ் என்று வைத்துக் கொள் என கூறினார். அவர் சொன்னபடி நானும் என்னுடைய பெயரை மாற்றி விட்டேன். என்னுடைய நிஜ பெயர் கணேசன் மட்டும்தான் என அவர் கூறியுள்ளார்.
