LATEST NEWS
முதல் மனைவியை விவாகரத்து செய்ய இதுதான் காரணம்…. பல வருடங்களுக்குப் பிறகு மனம் சிறந்த சீரியல் நடிகர் பப்லு….!!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பப்லு பிரித்விராஜ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது சன் டிவியில் பெரும்பாலான சீரியல்களிலும் அனைத்து வருகிறார்.
இவர் சில நாட்களுக்கு முன்பே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் என்று கூறி ஒரு இளம் பெண்ணை மேடையில் ஏற்றினார். இதனைத் தொடர்ந்து பிரித்விராஜ் 23 வயது மலேசிய பெண்ணுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வரும் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்கான காரணம் குறித்து அவர் மனம் திறந்து உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நானும் என்னுடைய முதல் மனைவியும் நண்பர்களாக இருந்தோம், ஆனால் கணவன் மனைவியாக மாறிய பிறகு பிரச்சனை தொடங்கியது. என்னை சாப்பிட்டியா என்று கூட கேட்டது கிடையாது.
சாப்பிட்டாச்சா என்று கேட்டால் என்னவென்று கேட்டால் கூட பசித்தால் நீங்களே சாப்பிட போறீங்க, இதுல என்ன கேக்குறதுக்கு இருக்கு என கூறுவார். ஒரு நிகழ்ச்சியில் கூட நானும் அவரும் கலந்து கொண்ட போது தொகுப்பாளர் உங்கள் கணவர் அழகாக இருக்கிறார் என கூறினார்.
அதற்கு யார் இவனா என கேட்டார். அது தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. அவமானம் செய்தது போல இருந்தது எனவும் அதுவே முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்கான காரணம் எனவும் பப்லு மனம் திறந்து பேசி உள்ளார்.
