அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு பட்டியல்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு பட்டியல்….!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு பல திரைப்படங்களை தமிழ் சினிமா மக்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ் சினிமா கோலிவுட் என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது தமிழகத்தின் சென்னையை மையமாகக் கொண்ட திரைப்பட துறையாகும். தமிழ் சினிமாவில் வெளியாகும் பல திரைப்படங்கள் வெற்றியை சந்தித்தாலும் பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன. அதே சமயம் ஒவ்வொரு நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் போது வசூல் வேட்டை ஆடுகிறது. அதன்படி அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். உலக அளவில் அதிக வசூல் செய்த முதல் 10 தமிழ் படங்கள் இதோ,

1. ரஜினியின் 2.0

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 2.0. இந்த திரைப்படம் உலக அளவில் ஒட்டுமொத்தமாக 800 கோடி வசூலை குவித்தது.

2. விக்ரம்

Advertisement

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 650 கோடி வசூலை குவித்தது.

3. பிகில்

Advertisement

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிகில். கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில் உலக அளவில் சுமார் 600 கோடி வசூலை குவித்தது.

4. குரு

Advertisement

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில்  மிதுன் சக்கரவர்த்தி, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், மாதவன் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 300 கோடி வசூலை குவித்தது.

5. பொன்னியின் செல்வன்

Advertisement

கல்கியின் வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய நிலையில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் உலக அளவில் 500 கோடி வசூலை குவித்தது.

6. மெர்சல்

Advertisement

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் கலந்த 2017 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த திரைப்படம் உலக அளவில் 400 கோடி வசூலை குவித்தது.

சர்க்கார்:

Advertisement

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ஒரு அரசியல் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் உலக அளவில் 400 கோடி வசூலை குவித்தது.

பீஸ்ட்:

Advertisement

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் உலக அளவில் 400 கோடி வசூலை குவித்தது.

7.எந்திரன்:

Advertisement

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் எந்திரன். இந்த திரைப்படம் தனது 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் ஒரு ரோபோவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் உலக அளவில் 350 கோடி வசூலை குவித்தது.

8.வாரிசு:

Advertisement

இந்த வருடம் பொங்கல் அன்று வெளியான இந்த திரைப்படத்தை வம்சி இயக்கியிருந்த நிலையில் விஜய் நடித்திருந்தார். இதில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் ஒரு குடும்ப கதையை மையமாகக் கொண்ட இந்த படம் உலக அளவில் 310 கோடி வசூலை குவித்தது.

9.தெறி:

Advertisement

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான நிலையில் ஒரு சென்டிமென்ட் நிறைந்த படமாக இருந்தது. இந்த திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூலை குவித்தது.

10.தர்பார்:

Advertisement

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் ரஜினி நடித்திருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் 250 கோடி வசூலை குவித்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in