LATEST NEWS
“8 உலகப் போர்களைத் தடுத்தது நான்தான்.. ஆனா..” மேடையில் ஆதங்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. உலக அரசியலில் பரபரப்பு..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஃபுளோரிடாவில் நடைபெற்ற தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நோபல் அமைதிப் பரிசு தனக்கு வழங்கப்படாதது குறித்துப் பகிரங்கமாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். உலகம் முழுவதும் நிலவி வந்த எட்டு கொடூரமான போர்களைத் தடுத்து நிறுத்தி, லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியும், தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படவில்லை என்று அவர் மேடையில் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, கடந்த ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணுஆயுத நாடுகளுக்கு இடையே ஏற்படவிருந்த பெரும் போரை, கடுமையான வரிகளை விதிப்பதாக மிரட்டித் தடுத்து நிறுத்திய பெருமை தன்னையே சாரும் என்றும் டிரம்ப் அந்தப் பிரசாரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோபல் கமிட்டியின் முடிவுகளைக் கடுமையாக விமர்சித்த டிரம்ப், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் பிணக்குகளைத் தீர்த்து வைத்ததோடு மட்டுமின்றி, உலகமே அழியும் நிலையில் இருந்த பேரழிவையும் தனது ராஜதந்திரத்தால் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். “நான் எட்டு போர்களை நிறுத்தியுள்ளேன்; ஆனால் எனக்கு நோபல் பரிசு கிடைத்ததா? இல்லை…” என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு அதிபரும் செய்யாத அளவிற்குப் உலக அமைதிக்காகப் பாடுபட்டும், நோபல் கமிட்டி தன்னைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக டிரம்ப் தனது உரையில் வேதனை தெரிவித்துள்ளார்.
