வீரம் படத்தில் நடித்த சிறுமியா இது?…. ஹீரோயினி போல வளர்ந்துட்டாங்களே… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வீரம் படத்தில் நடித்த சிறுமியா இது?…. ஹீரோயினி போல வளர்ந்துட்டாங்களே… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

Published

on

பொதுவாக சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது நடிகர் நடிகைகளாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.

அதாவது நடிகர் விஜய் முதல் சிம்பு வரை பலரும் தற்போது முன்னணி நடிகர்களாக இருப்பவர்களும் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் தான்.

Advertisement

சினிமாவில் நடித்த எத்தனை குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டனர்.

அதன்படி நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் சிறுமி யுவினா.

Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் திரைப்படத்தில் தமன்னா, பாலா மற்றும் சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் தமன்னாவின் குடும்பத்தில் நடித்தவர்தான் சிறுமி யுவினா. இவரை முதன் முதலில் அறிமுகம் செய்தது ஏவிஎம் நிறுவனம்தான்.

Advertisement

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான உறவுக்கு கைகொடுப்போம் என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார்.

அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து வீரம் திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அதில் கயல் என்ற பெயரில் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.

2008 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த யுவினாவின் அப்பாவிற்கு தனது குழந்தையை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

Advertisement

அதன்படி 2013 ஆம் ஆண்டு உறவுக்கு கைகொடுப்போம் என்ற சீரியலில் யுவினா நடித்தார்.

அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார். தமிழில் அரண்மனை, மாஸ், கத்தி, மஞ்சப்பை மற்றும் மேகா உள்ளிட்ட பல திரைப்படங்களில் யுவினா நடித்துள்ளார்.

Advertisement

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் அதிக அளவு நடித்து வருகின்றார். இந்நிலையில் யுவினாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் வீரம் பட குழந்தை நட்சத்திரமா இது? ஹீரோயினி போல இருக்காங்களே என கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in